31 ஆயிரமாக குறைந்த கொரோனா – இந்தியாவில் கொரோனாவின் நிலை!

In India, the impact of corona has affected more than 31,000 people in the last 24 hours alone, but the impact of corona is declining.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவின் தாக்கம் 31 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு ஏற்பட்டுள்ளது, இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் கணிசமாக குறைந்து கொண்டே தான் வருகிறது.

ஒரு நாளுக்கு லட்சக்கணக்கில் புதியதாக ஏற்பட்டு கொண்டிருந்த கொரோனா தொற்று தற்பொழுது 31 ஆயிரம் வரைக்கும் குறைந்துள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனவால் 9,463,254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 1,37,659 பேர் உயிரிழந்துள்ளனர். 8,888,595 பேர் குணமடைந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 4,37,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக 31,179 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 482 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலை மாற தொடர்ந்து போராடுவோம். சமூக இடைவெளிகளை கடைபிடித்து முக கவசம் அணிவதை வழக்க படுத்திக்கொள்வோம்.