கொரோனா வைரஸ் விலங்குகள் மூலம் பரவாது….! மனிதர்கள் மூலம் மட்டுமே மனிதர்களுக்கு பரவும்….!

Published by
லீனா

வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதருக்கு பரவவில்லை. மனிதரிடம் இருந்து தான் மனிதருக்கு பரவுகிறது.

கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பேசிய என்ஐடிஐ அயோக் உறுப்பினர் வி.கே. பால் அவர்கள் கூறுகையில், ‘வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதருக்கு பரவவில்லை. மனிதரிடம் இருந்து தான் மனிதருக்கு பரவுகிறது. நீங்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டால், உடல் வலி அல்லது காய்ச்சல் போன்ற பக்க விளைவுகளை அனுபவிக்கமாட்டீர்கள். இந்த அறிகுறிகளை நீங்கள் உணரவில்லை என்றால் நீங்கள் சாதாரணமாக இருக்க முடியும்.’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், சமூக இடைவெளியை பின்பற்றுதல், தேவையற்ற கூட்டங்களை தவிர்த்தல், வீட்டில் தங்கியிருந்தல் போன்ற நடத்தைகளை நாம் பின்பற்ற வேண்டும்.  இந்த நோய்க்கு எதிரான நீண்ட போராட்டத்தில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே உள்ள மக்களுக்கு மருத்துவ சகோதரர்கள் முன்வர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

எங்கள் வேண்டுகோள் என்னவென்றால், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் உள்ள மக்கள் மற்றும் குடும்பங்களுக்கு தொலை தொடர்புகளை பயன்படுத்தி மருத்துவர்கள் அவர்களுக்கு உதவ வேண்டும். நோய் பரவுவதை தவிர்ப்பது அரசாங்கத்திற்கும், மக்களுக்குமான ஒரு பொறுப்பாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!

சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!

டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும்…

1 hour ago

நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…

2 hours ago

இங்கிலாந்தில் பழமையான மரத்தை வெட்டிய இருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை.!

இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…

2 hours ago

“9 வருஷம் எப்படியோ தாக்கு புடிச்சிட்டேன்… இன்னும் 2 மாசம் தானே” – விஷால் கலகல பதில்.!

சென்னை : விஷாலின் 35-வது படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது. தற்பொழுது, 'ரெட் பிளவர்' திரைப்பட நிகழ்வில் கலந்து…

3 hours ago

”மருத்துவ கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டம் பாயும்” – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகளை அனுமதியின்றி கொட்டுவது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. இதற்காக, தமிழ்நாடு அரசு குண்டர் சட்டத்தின்…

4 hours ago

ஆளுநர் மாளிகை சார்பில் இல்லாத திருக்குறளுடன் விருது.., சர்ச்சையில் ஆளுநர்.!

சென்னை : ஆளுநர் மாளிகையில் கடந்த ஜூலை 13-ம் தேதி அன்று நடைபெற்ற மருத்துவர் தின நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர்…

4 hours ago