மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 116 ஆக எண்ணிக்கை!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நோய் முதலில் சீனாவில் தீவிரமாக பரவி வந்த நிலையில், தற்போது மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. தற்போது இந்த நோய் இந்தியாவிலும் 500-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது.
இந்நிலையில், மற்ற மாநிலங்களிலும் இந்த நோய் தீவிரமாக பரவி வருகிற நிலையில், மகாராஷ்டிராவில் ஏற்கனவே 111 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மஹாராஷ்டிராவில் உள்ள ஸாங்கிலியில் ஐந்து பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மொத்த எண்ணிக்கை 116 – ஆக உயர்ந்துள்ளது.