#coronaupdate : இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா தொற்று...!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,527  பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,527  பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு நாளில் 2,451 ஆக இருந்த நிலையில் கடந்த ஒரே நாளில் 2,527 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,54,952 ஆக பதிவாகியுள்ளது.

கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 54 ஆக இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 33 ஆக குறைந்துள்ளது. இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,22,149  ஆக பதிவாகியுள்ளது. கடந்த ஒரே நாளில் 1656 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும், இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,25,17,724ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 15,079பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை1,87,46,72,536டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் இந்தியாவில் ஒரே நாளில் 19,13,296 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.