அதிர்ச்சி ! இந்தியாவில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா 24 மணி நேரத்தில் 780 பேர் பலி

Coronavirus infection in 1 lakh 32 thousand people across India in the last 24 hours. And 780 deaths ..!

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1லட்சத்து 32ஆயிரம் பேருக்கு கொரோனா  தொற்று உள்ளதாகவும்,மேலும் 780 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வரும் இச்சமயத்தில்,கடந்த 24மணி நேரத்தில் சுமார் 1லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா தொற்றின் தாக்கம் பரவி வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை, கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புகள் மற்றும் உயிரிழந்துள்ளவர்களின் விபரங்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி,கொரோனா தொற்றானது 1 லட்சத்து 31ஆயிரத்து 968பேருக்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.மேலும் 780பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர்.இதனையடுத்து செயலில் உள்ள மொத்த கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை 9,79,608 ஐ எட்டியுள்ளன,என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா இதுவரை கொரோனா க்கான 25,40,41,584  மாதிரிகளை சோதனை செய்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.அவற்றில் 13,64,205 மாதிரிகள் வியாழக்கிழமை சோதனை செய்யப்பட்டன.ஆகையால் இதுவரை சோதனை செய்யப்பட்ட மொத்த  எண்ணிக்கை வியாழக்கிழமை ஒன்பது கோடியைத் தாண்டியது.

இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா க்கு எதிராக ஏப்ரல் 11 முதல் 14 வரை ‘தடுப்பூசி திருவிழா’வைக் கடைப்பிடிக்குமாறு முதலமைச்சர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அழைப்பு விடுத்தார்.