யானை லட்சுமி உயிரிழப்பு – அதிர்ச்சியில் பக்தர்கள்!

நடைபெயர்ச்சிக்கு அழைத்து சென்றபோது மயங்கி விழுந்து கோயில் யானை லட்சுமி உயிரிழப்பு.

நடைபெயர்ச்சிக்கு அழைத்து சென்றபோது மயங்கி விழுந்து கோயில் யானை லட்சுமி உயிரிழப்பு.

புதுச்சேரியில் பிரசக்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி (32) திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது. அதிகாலையில் யானை லட்சுமியை பாகன் சக்திவேல், நடைபெயர்ச்சிக்கு அழைத்து சென்றபோது மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. யானை லட்சுமி இறப்பு காரணமாக மணக்குள விநாயகர் கோயில் நடை சாத்தப்பட்டது.

மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் மிகுந்த அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. யானை லட்சுமிக்கு மணக்குள விநாயகர் கோயில் முன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் யானை லட்சுமிக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார்.

யானை லட்சுமியை இழந்துவிடுவோருக்கு இரங்கல் தெரிவித்தார். அவள் யானை இல்லை என் தோழி.. தலையில் இடி விழுந்தது போல் உள்ளது என துக்கம் தாளாமல் தமிழிசை தெரிவித்தார். மேலும், யானை லட்சுமி அடக்கத்திற்கு தேவையான உதவியை அரசு செய்யும் எனவும் குறிப்பிட்டார். இதனிடையே, யானை லட்சுமி மயங்கி விழும் சிசிடிவி காட்சியும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

unknown node