கர்நாடகாவில் உயிரிழப்பு விகிதம் 100-ஐ கடந்தது..அப்போ பாதிப்பு ?

கர்நாடகா மாநிலத்தில் நேற்று மட்டும் 204 பேருக்கு கொரோனா உறுதியாகிய நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,734 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று மட்டும் 204 பேருக்கு கொரோனா உறுதியாகிய நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,734 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில், நேற்று ஒரே நாளில் 204  பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,734  ஆக அதிகரித்துள்ளது. மேலும் 344 பேர் நேற்று குணமடைந்த நிலையில் மொத்த குணடைந்த எண்ணிக்கை 4804 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் இன்று 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

unknown node

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,43,091 லிருந்து 3,54,065ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் 1,80,013லிருந்து 1,86,935ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,900 லிருந்து 11,903ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதித்த 1,55,178 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்தியாவில் நேற்று மட்டும் கொரோனாவால் 2,003 பேர் உயிரிழந்துள்ளனர்.