டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீசி கைதானவருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்துள்ளது டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றம்.
unknown nodeநேற்று டெல்லி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதிய உணவு வழக்கம் போல சாப்பிட சென்றார்.டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சாப்பிட சென்றதும் அவர் மீது மிளகாய்ப் பொடி தாக்குதல் நடைபெற்றுள்ளது .பின் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை தாக்கிய அனில் குமார் ஹிந்துஸ்தானி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீசி கைதான அனில் என்பவருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.