டெல்லி விவசாயிகள் போராட்டம் : இன்று ஆறாவது கட்ட பேச்சுவார்த்தை!

The sixth phase of talks is underway today, with farmers protesting against the agrarian law and besieging Delhi.

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து,  டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில், இன்று ஆறாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து,  டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த போராட்டத்தில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு இதுவரை ஒரு முடிவில்லாத நிலையில், நாடு முழுவதும் முழு அடைப்புக்கு விவசாய சங்கங்கள் நேற்று அழைப்பு விடுத்திருந்த நிலையில், இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி கட்சி தலைவர்,  இடதுசாரி முன்னணி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இதற்கு முன்னர் 5 முறை மத்திய அரசின் அழைப்பை ஏற்று விவசாயிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. ஆனால் ஐந்து முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும், எந்த ஒரு முடிவும் இதுவரை எட்டப்படவில்லை. இதனை அடுத்து நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விவசாய சங்கத் தலைவர் சந்தித்த நிலையில், இன்று ஆறாவது கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.