இன்று முதல் சபரிமலை கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி...!

இன்று முதல் சபரிமலை கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி.

இன்று முதல் சபரிமலை கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள, சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நேற்று மாலை நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. வரும் 21-ஆம் தேதி வரை வழக்கமான மாதாந்திர பூஜைகள் நடக்க உள்ளன. மேலும், சபரி மலைக்கு வருபவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும், 48 மணி நேரத்துக்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்று கொண்டு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தரிசனத்திற்கு தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இரண்டு டோஸ்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட சான்று அவசியம் என திருவிதாங்கூர் தேவஸ்வம் தெரிவித்துள்ளது

இன்று முதல் சபரிமலை கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி...!