ராகுல் காந்தி பார்ட்டியில் கலந்து கொண்டதாக வீடியோ வெளியான நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் விளக்கம்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல்காந்தி நேபாளத்தில் க்ளப் ஒன்றில் பார்ட்டியில் ஜாலியாக கலந்துகொள்வது போன்ற வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாக உலா வருகிறது. ராகுல் காந்தி பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டதாக வீடியோ ஒன்றை பாஜகவினர் வெளியிட்டதாக தகவல் கூறப்படுகிறது. மேலும், பாஜக மூத்த தலைவர்கள் அமித் மாள்வியா உள்ளிட்டோர் இந்த வீடியோவை பகிர்ந்து ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
இந்த நிலையில், ராகுல் காந்தி பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டதாக வீடியோ ஒன்று வெளியானதை அடுத்து, காங்கிரஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நேபாளம் நண்பர் ஒருவரின் திருமணத்தில் பங்கேற்க சென்றுள்ளார் என்றும் திருமண கொண்டாட்டத்தில் கலந்துகொள்வது இந்தியாவில் இன்னும் குற்றமாக்கப்படவில்லை எனவும் பொதுச்செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா விளக்கமளித்தார். அந்த திருமண விழாவில் ராகுல் காந்தி நிற்கும் வீடியோதான் இப்படி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…