கேரளாவில் அரிய மலேரியா இனம் கண்டுபிடிப்பு – மாநில சுகாதார அமைச்சர் சைலஜா

State Health Minister Sailaja said a soldier returning from Sudan had been diagnosed with a new strain of malaria, Plasmodium ovale.

சூடானில் இருந்து திரும்பிய ஒரு சிப்பாயிடம்  மலேரியாவின் புதிய இனமான பிளாஸ்மோடியம் ஓவலே கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.

கேரளாவில் ஒரு அரிய மலேரியா இனம் பதிவாகியுள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் சைலஜா அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சூடானில் இருந்து திரும்பிய ஒரு சிப்பாயிடம்  மலேரியாவின் புதிய இனமான பிளாஸ்மோடியம் ஓவலே கண்டறியப்பட்டது. இந்த சிப்பாய் தற்போது கண்ணூரில்  உள்ள மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளார்.

பிளாஸ்மோடியம் ஓவலே என்பது மனிதர்களை பாதிக்கும் நான்கு வகையான மலேரியாக்களில் ஒன்று. இது முதன்மையானது. ஆப்பிரிக்க பகுதிகளில் இது அதிகமாக காணப்படுகிறது. ஆனால், மேற்கு பசிபிக், பிலிப்பைன்ஸ் மற்றும் நியூகினியா தீவுகளில் இது பதிவாகி உள்ளது. இது ஒரு ஆபத்தான மலேரியா இனமாகும்.

மலேரியாவின் புதிய இனமான பிளாஸ்மோடியம்  ஓவலே மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளது.  சூடானில் இருந்து வந்தா சிப்பாயிடம் இது கண்டறியப்பட்டுள்ளது. கண்ணூரில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சரியான நேரத்தில் சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் நோய் பரவுவதை தவிர்க்கலாம் என, மாநில சுகாதார அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.