இந்தியாவில் கொரோனா தொற்றின் தற்போதைய நிலை தெரியுமா?

In the last 24 hours alone, more than 30,000 people have been infected with the new corona virus in India, killing 440 people.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக கொரோனா வைரஸால் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 440 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாளுக்கு நாள் கொரோணா வைரஸின் தாக்கம் உலகின் பல நாடுகளில் அதிகரித்து கொண்டே சென்றாலும், இந்தியாவில் குறைந்து கொண்டே செல்கிறது என்று தான் கூற வேண்டும். இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 98,27,026 பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும், இவர்களில் 1,42,662 பேர் உயிரிழந்துள்ளனர். 93,23,792 பேர் குணமடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் தவிர தற்போது மருத்துவமனைகளில் 3,60,572 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக கொரோனா வைரஸால் 30,034 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 440 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலை மாற வேண்டுமானால் தொடர்ந்து நாம் அரசாங்கம் கூறும் விதிமுறைகளை பின்பற்றுவோம். முகக்கவசம் அணிவதையும் சமூக இடைவெளிகளை பின்பற்றுவதையும் வழக்கப்படுத்திக் கொள்வோம்.