இந்தியாவில் இன்று கொரோனாவின் நிலை தெரியுமா? வாருங்கள் அறியலாம்!

In the last 24 hours alone, more than 36,000 people have been infected with the corona virus, and 500 have died.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 36 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், 500 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து கொண்டே சென்றாலும் புதியதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. இதுவரை இந்தியாவில் 9,499,710 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 138,159 பேர் இவர்களில் உயிரிழந்துள்ளனர், 8,931,798 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக கொரோனாவால் இந்தியாவில் 36,456 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 500 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்கள் தவிர தற்போது மருத்துவமனைகளில் 429,753 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலை மாற தொடர்ந்து அரசு கூறுவதை கடைப்பிடித்து சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிவது வழக்கப் படுத்திக் கொள்வோம்.