பஞ்சாப் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழப்பின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது.
பஞ்சாப்பில் நேற்று ஒரே நாளில் 99 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 2986 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை பாதிப்பில் இருந்து 2282 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். இன்னும் மருத்துவமனையில் 641 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் நேற்று ஒரே நாளில் மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழப்பின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் இதன் உயிரிழப்பு தமிழகத்தை பொருத்தவரையில் குறைவானது தான்.
unknown nodeஇந்நிலையில் நேற்று இந்தியாவில் 10,956 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 2,86,579-ல் இருந்து 2,97,535 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,498 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,47,195 ஆகவும் உயர்ந்துள்ளது.
இந்நிலையில், உலக அளவில் பாதிப்பு பட்டியலில் தற்போது 4-வது இடத்தில் உள்ள இந்தியா, விரைவில் 3-வது இடத்துக்கு வரும் என அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.