டெல்லி :பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாள் செப்டம்பர் 17-ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, லியோனல் மெஸ்ஸி அவருக்கு தனது 2022 FIFA உலகக் கோப்பை ஜெர்ஸியை (அர்ஜென்டினா அணியின்) கையொப்பமிட்டு பிறந்தநாள் பரிசாக அனுப்பியுள்ளார்.
இந்த ஜெர்ஸி, அர்ஜென்டினா உலகக் கோப்பையை வென்றபோது மெஸ்ஸி அணிந்திருந்த பிரபலமான ஜெர்ஸி ஆகும். மெஸ்ஸி டிசம்பர் 13-15 வரை இந்தியாவுக்கான சுற்றுப்பயணத்தைத் திட்டமிட்டுள்ள நிலையில், இந்தப் பரிசு அனுப்பப்பட்டுள்ளது.
சுற்றுப்பயணத்தின்போது, கொல்கத்தா, மும்பை மற்றும் டெல்லியில் நிகழ்ச்சிகள் நடைபெறும், மேலும் மோடியுடன் சந்திப்பு ஏற்பாடு செய்ய முயற்சிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, விளையாட்டு விளம்பரதாரரான சதத்ரு தத்தா, ‘பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு மெஸ்ஸி ஒரு ஜெர்சியை அனுப்பியுள்ளார். மெஸ்ஸி இந்தியா வரும்போது, பிரதமரைச் சந்திக்க முயற்சிப்போம்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு மெஸ்ஸி இந்தியா வருகிறார். அவர் முதல் முறையாக டெல்லி மற்றும் மும்பைக்கு வருவார். டிசம்பர் 13 ஆம் தேதி மெஸ்ஸி கொல்கத்தாவுக்கு வருவார். மறுநாள் மும்பையை அடைவார். டிசம்பர் 15 ஆம் தேதி டெல்லி வந்து நிகழ்வில் பங்கேற்பார்.
தொடர்ந்து பேசிய அவர், மெஸ்ஸிக்கு தேநீர் என்றால் மிகவும் பிடிக்கும். நான் அவருக்கு அசாம் தேநீர் கொடுத்தேன். இங்குள்ள தேநீரின் சிறப்பு பற்றி நான் அவரிடம் சொன்னேன். மெஸ்ஸி நிச்சயமாக அதை ருசிப்பார் என்று கூறினார். இதனுடன், இந்திய உணவின் சிறப்புகள் மற்றும் மாறுபாடுகள் பற்றிய தகவல்களையும் அவருக்கு வழங்கினேன்” என்றார்.
