சிகிச்சைக்கு சென்ற பெண், ஆண் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் !

30 வயதான பெண்  சிகிச்சைக்கு சென்றபோது அவர் ஒரு ஆண் என்பதைக் அறிந்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

30 வயதான பெண்  சிகிச்சைக்கு சென்றபோது அவர் ஒரு ஆண் என்பதைக் அறிந்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் பிர்பும் பகுதியில் 30 வயது உடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார்.இவருக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஆணுடன் திருமணம் நடைபெற்றது.இதனிடையே கடந்த சில நாட்களாகவே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக நேதாஜி புற்றுநோய் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.அங்கு அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவர் ஆண் என்பதை அறிந்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.ஆனால் அவருக்கு பெண்களுக்குஉரிய உடல் உறுப்புகள் இருந்தது.குறிப்பாக குரலும் பெண்ணின் குரல் தான்.ஆனால் மரபணு ரீதியாக அவர் ஆணாக உள்ளார். இவருக்கு பிறப்பிலே கருப்பை கிடையாது. மேலும் மாதவிடாய் இதுவரை வந்தது இல்லையாம்.

unknown node

மேலும் ஆண்களுக்கு ஏற்படும் டெஸ்டிகுலார் புற்றுநோய் தான் இவருக்கு ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் தான் அவருக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவர் தத்தா கூறுகையில்,இது அதிசயமான நிகழ்வு  ஆகும். இப்படி 22,000 பேரில் ஒருவருக்கு தான் வரும்.இவருக்கு ஆண்களுக்கு உள்ள XY  குரோமோசோம்களே உள்ளது .இவருக்கு தற்போது கீமோ தெரபி அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.