கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர். அப்போது நாடாளுமன்றத்தில் அமல்படுத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடினர். வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்ட பிறகு அந்தப் போராட்டங்கள் கைவிடப்பட்டன. தற்போது அதே போல் மீண்டும் ஒரு மிகப்பெரிய போராட்டத்தை விவசாயிகள் கையில் எடுத்துள்ளனர்.
இதெல்லாம் போலி நம்பாதீர்கள்.. CBSE வெளியிட்ட விழிப்புணர்வு தகவல்.!
விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கும் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் கொண்டு வருவதற்கான ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நாடாளுமன்றத்தில் தனி சட்டமாக இயற்ற வேண்டும் என்று கூறி வருகின்றனர். இதனுடன் சேர்த்து பல்வேறு விவசாய கோரிக்கைகளையும் விவசாயிகள் முன்னிறுத்தி உள்ளனர்.
டெல்லி போராட்டத்தை முன்னரே விவசாயிகள் அறிவித்துதான் காரணமாக, டெல்லியை நோக்கி விவசாயிகள் வருவதை தடுக்க டெல்லி – அரியானா, டெல்லி – பஞ்சாப் உள்ளிட்ட பிரதான எல்லைகள் பாதுகாப்பு அதிகாரிகளால் பலப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களை தடுக்க டெல்லி மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எல்லை பகுதி மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சமயத்தில் தான் நேற்று மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், அர்ஜுன்முன்டா, குல்தீப்சிங் டல்லேவால் ஆகியோர், வேளாண் துறை உயர் அதிகாரிகள் சண்டிகரில் விவசாய அமைப்பு பிரதிநிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 6 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை.
இதன் காரணமாக ஏற்கனவே அறிவித்தபடி இன்று காலை 10 மணிக்கு திட்டமிட்டபடி பல்வேறு மாநில விவசாயிகள் டிராக்டர் மூலம் டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். இதனால் டெல்லி முழுவதும் மிகப் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
