கொரோனா அதிகரிப்பு..! பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்.! மாநில அரசு உத்தரவு.!

கொரோனா அதிகரிப்பதன் காரணமாக பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா அதிகரிப்பதன் காரணமாக பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது மீண்டும் இந்தியாவில் கொரோனா பரவல் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. முந்தைய அளவுக்கு இல்லை மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றாலும், முன்னெச்சரிக்கையுடன் இருக்க பொதுமக்களை அரசு அறிவுறுத்தி வருகிறது.

முன்னெச்சரிக்கை :

கேரளாவிலும் கொரோனா தொற்றானது சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அம்மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

முக்கவசம் கட்டாயம் :

நேற்று ஒரே நாளில் 210 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. இதனால், கொரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கையாக முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.