மத்திய பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், நேற்று கங்கூர் கோவில் திருவிழாவின் போது, 65 பேரின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்தடுத்த வாந்தி, வயிற்றுப்போக்கு, நரம்புத் தளர்ச்சி என்று கோவிலுக்கு வந்த பக்த்ர்கள் புகார் அளித்ததை தொடர்ந்து, அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அந்த 65 பேரில் 35 பேர் சிகிச்சைக்குப் பிறகு நேற்று இரவிலேயே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். பின்னர், 24 நோயாளிகள் காலையில் வீட்டிற்குச் சென்றனர். தற்போது, நான்கு குழந்தைகள், ஒரு ஆண், ஒரு பெண் உட்பட ஆறு நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்மாவட்ட ஆட்சியர் சிவராஜ் சிங் வர்மா, உணவில் விஷம் கலந்தது குறித்து, தகவல் அளித்த கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.