Today’s Live: பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இனி செயல்படும் – எடப்பாடி பழனிசாமி

பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக:

பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக:

என்னை ஒற்றை தலைமை என சொல்ல வேண்டாம். நான் ஒரு சாதாரண தொண்டர், எங்களுக்கு தேவை ஒரு பொதுச்செயலாளர், ஒரு சிலரை தவிர கட்சியை நேசிப்பவர்களை மீண்டும் கட்சியில் இணைத்து கொள்வோம். இனி பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.

20.04.2023 7:30 PM

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில்  அதிமுக வேட்பாளர்:

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அன்பரசன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். முன்னதாக, எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளரானது செல்லும் என தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அறிவித்தது. இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை அடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

20.04.2023 5:55 PM

unknown node

இபிஎஸ்-ஐ அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்:

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளரானது செல்லும் என தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அறிவித்துள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை அடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது. அதன்படி, கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு வழங்க உத்தரவிட்டுள்ளது.

20.04.2023 1:30 PM

ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா:

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

20.04.2023 12:30 PM

ராகுல்காந்தி மனு தள்ளுபடி:

2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து சூரத் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால், ராகுல்காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனை என்பது உறுதியாகியுள்ளது.

20.04.2023 12:00 PM