மேற்குவங்க மாநிலம் பங்குராவில் இரு சரக்கு ரயில்கள் மோதி விபத்து ஆன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று மேற்கு வங்க மாநிலம் பாங்குரா அருகே இரண்டு சரக்கு ரயில்கள் மோதியதில் 12 பெட்டிகள் தடம் புரண்டன. விபத்துக்குப் பிறகு, இரண்டு சரக்கு ரயில்கள் தடம் புரண்டதால் பல ரயில் சேவைகள் இன்றும் பாதிக்கப்படும் என்று தென்கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
unknown nodeunknown nodeமேலும், ” ஆத்ரா கோட்டத்தின் ஒண்டாகிராம் நிலையத்தில் இன்று சரக்கு ரயில் தடம் புரண்டதால் 14 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன, 3 திசைதிருப்பப்பட்டன மற்றும் 2 குறுகிய கால ரயில்கள் நிறுத்தப்பட்டன” என்று தென்கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தத்தக்கது.
