ஹரியானாவில் ஜூலை 5 வரை சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட பொதுமுடக்கம்..!

ஹரியானா மாநிலத்தில் சில தளர்வுகளுடன் ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ஹரியானா மாநிலத்தில் சில தளர்வுகளுடன் ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ஹரியானா மாநிலத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதன் காரணத்தால் சில தளர்வுகளுடன் ஜூலை 5 வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது. இங்கு அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள்:

அனைத்து கடைகளும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி.

மால்கள் காலை 10 மணி முதல் 8 மணி வரை திறக்க அனுமதி.

ஹோட்டல் மற்றும் மதுக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை 50% இருக்கைகளுடன் திறக்க அனுமதி. ஹோட்டலில் இரவு 10 மணி வரை டெலிவரி செய்ய அனுமதி.

50% பேருக்கு மதவழிபாட்டு தளங்களில் அனுமதி.

100% ஊழியர்களுடன் கார்ப்பரேட் அலுவலகம் இயங்க அனுமதி.

திருமணம் மற்றும் இறுதி சடங்குகளில் 50 பேருக்கு மட்டும் அனுமதி. திருமண ஊர்வலங்களுக்கு தடை.

காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை உடற்பயிற்சி கூடங்கள் இயங்க அனுமதி.