படுக்கையில் இருந்து கீழே விழுந்த பெண் பலி!!

மும்பையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற உதயன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சரஸ்வதி பணிசால் என்ற 40 வயது பெண்மணி ஒருவர் ரயில் படுக்கையிலிருந்து கீழே விழுந்து இறந்தார்.

மும்பையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற உதயன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சரஸ்வதி பணிசால் என்ற 40 வயது பெண்மணி ஒருவர் ரயில் படுக்கையிலிருந்து கீழே விழுந்து இறந்தார்.

ஏசி கோச்சில் சென்ற இவர், ரயில் பெங்களூர் நெருங்கியதும், மேல் படுக்கையிலிருந்து கீழே இறங்க முயற்சித்துள்ளார். அப்பொழுது கால் தடுமாறி, அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலமாக அடிபட்டது.

இது தொடர்பாக ரயில்வே துறைக்கு ட்விட்டர் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில் நிலையத்திற்கு வந்ததும் அவர்கள் சிகிச்சை கொடுத்தனர். மேல் சிகிசைக்காக அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியில் அவர் உயிர்இழந்தார்.