கேரள வரலாற்றில் புகழ்பெற்ற அரசியல்வாதி 101-வது வயதில் காலமானார்....!

KR Gauri Amma, a senior Communist of Kerala and the leader of the Democratic Defense Committee, passed away due to ill health.

கேரளாவின் மூத்த கம்ம்யூனிஸ்டும், ஜனதிபத்ய சமரக்ஷன சமிதியின் தலைவருமான  கே.ஆர்.கௌரி அம்மா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

கேரளாவின் மூத்த கம்யூனிஸ்டும், ஜனதிபத்ய சமரக்ஷன சமிதியின் தலைவருமான  கே.ஆர்.கௌரி அம்மா (101) அவர்கள், கடந்த சில வாரங்களாக, வயது மூப்பு தொடர்பான வியாதியால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இவரை, முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா ஆகியோர் சமீபத்தில், மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இந்நிலையில், கௌரி அம்மா இன்று காலை 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கேரள வரலாற்றில் ஒரு புகழ்பெற்ற அரசியல் தலைவரான இவர், மாநிலத்தில் அதிக காலம் பணியாற்றிய பெண் அமைச்சர் ஆவார். இவர் வருவாய், கலால், தொழில்கள், உணவு மற்றும் வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு முக்கிய இலாகாக்களுக்கு அவர் தலைமை தாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.