விவசாயிகள் போராட்டம்..! மத்திய அமைச்சர்களுடன் விவசாயிகள் 4ஆம் கட்ட பேச்சுவார்த்தை

By

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடரும் நிலையில் சண்டிகரில் மூன்று மத்திய அமைச்சர்கள் மற்றும் விவசாய சங்க தலைவர்கள் இடையே நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டம் (MSP) உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் ஆறாவது நாளாக இன்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பல்வேறு விவசாய அமைப்புகள் டெல்லியை நோக்கி டிராக்டர்களில் பேரணியாக சென்று முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், போராட்டத்தை கைவிடுமாறு மத்திய அரசு விவசாயிகள் அமைப்பின் தலைவர்களுடன் நடத்திய மூன்று கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது. இதனை தொடர்ந்து சண்டிகரில் இன்று நடக்கும் நான்காம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட டெல்லியில் இருந்து பியூஷ் கோயல், அர்ஜுன் முண்டா மற்றும் நித்யானந்த் ராய் ஆகிய மூன்று மத்திய அமைச்சர்களும் சண்டிகர் புறப்பட்டு சென்றனர்.

ஆச்சார்யா வித்யாசாகர் மறைவையொட்டி பிரதமர் இரங்கல்..!

விவசாயிகள் அமைப்பினருடன் பேச்சுவார்த்தையானது இன்றிரவு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் போது குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்ட உத்தரவாதம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

Dinasuvadu Media @2023