#BREAKING: உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மதிப்பதே இல்லை – தலைமை நீதிபதி அதிருப்தி

The Chief Justice of the Supreme Court has condemned the failure to fill the vacancies of tribunals across the country.

நாடு முழுவதும் உள்ள தீர்ப்பாயங்களின் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்தார் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி.

நாடு முழுவதும் பல்வேறு தீர்ப்பாயங்களில் உள்ள காலியாக பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும், கால அவகாசம் வழங்கியும், இந்த பணியிடங்களை மத்திய அரசு  இதுவரை நிரப்பவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே, இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கும் தீர்ப்புகள், உத்தரவுகளை மத்திய அரசு மதிப்பதே இல்லை என்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா அதிருப்தி தெரிவித்துள்ளார். தீர்ப்பாயங்களை தொடர்ந்து நடத்த விருப்பம் இல்லை என்றால், அனைத்து சட்டங்களையும் ரத்து செய்துடுமாறும் கடுமையாக கூறியுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள தீர்ப்பாயங்களின் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது ஏன் என்றும் மத்திய அரசு எங்களது பொறுமையை மிகவும் சோதித்து பார்க்கிறது எனவும் தெரிவித்த தலைமை நீதிபதி, உடனடியாக எங்களது தீர்ப்பை செயல்படுத்தும் பணிகளை பாருங்கள் என்று கூறி இந்த வழக்கிற்கு ஒத்திவைத்தார்.