கணவருடன் சண்டை…4 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த பெண்.!!

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள 27 வயது பெண் ஒருவர் தனது 4 குழந்தைகளைக் கொன்றுவிட்டு, பின்னர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளை அந்த பெண் இரும்பு டிரம்மில் பூட்டியதாகக் கூறப்படுகிறது,
ஸ்டீல் டிரம்மில் பூட்டியதால் குழந்தைகள் மூச்சுத் திணறலால் இறந்தனர். தற்கொலை செய்துகொண்டு இறந்த பெண்ணின் கணவர் சுரங்கத் தொழிலாளி என்றும், சம்பவம் நடந்தபோது அவர் வேலைக்காக வெளியூர் சென்றிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். அக்கம் பக்கத்தினர் தான் உயிரிழந்தது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அதுவே இந்த கொலைக்கு காரணமாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொண்டு முறையான புகாருக்காக காத்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த மரணம் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கிய பிரதேசவாசிகள், குறித்த பெண் அண்மையில் தனது கணவருடன் சண்டையிட்டதாக தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025