டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு அருகே திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காலை 11.54 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது, அதைத் தொடர்ந்து ஆறு

AIIMS Hospital

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு அருகே திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காலை 11.54 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது, அதைத் தொடர்ந்து ஆறு தீயணைப்பு வண்டிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

அவசர சிகிச்சை பிரிவுக்கு சற்று மேலே உள்ள பழைய OPD கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள எண்டோஸ்கோபி அறையில் இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

தீ விபத்து ஏற்பட்டதை அறிந்து, அறையில் இருந்த நோயாளிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.