செங்கோட்டையில் 10வது முறையாக கொடியேற்றம்.. மன்மோகன் சிங் சாதனையை சமன் செய்யும் பிரதமர் மோடி.!

இன்று நமது நாட்டில் 77வது சுதந்திர தின விழா கொண்டாடபட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி இன்று 10வது வது முறையாக டெல்லியில் உள்ள செங்கோட்டையில் கொடியேற்றி

Former PM Manmohan singh - Prime Minister Modi

இன்று நமது நாட்டில் 77வது சுதந்திர தின விழா கொண்டாடபட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி இன்று 10வது வது முறையாக டெல்லியில் உள்ள செங்கோட்டையில் கொடியேற்றி நாட்டு மக்கள் மத்தியில் 89 நிமிடங்கள் உரையாற்றினார்.

கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்தது 21வது பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பு வகித்து அதன் பின்னர் 2019ஆம் தேர்தலிலும் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்து 22வது முறையும் நரேந்திர மோடி பிரதமர் ஆனார்.

இந்தாண்டு 10வது முறையாக செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்ததன் மூலம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சாதனையை சமன் செய்துள்ளார். மன்மோகன் சிங் 2004 முதல் 2013 வரையில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பிரதமராக பொறுப்பில் இருந்து செங்கோட்டையில் 10 முறை தேசிய கொடி ஏற்றிவைத்து உரையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.