நான்கு நாள்களாக வெள்ளத்தில் சிக்கிய கு‌ரங்கு‌களை கயிறு மூலம் மீட்ட வனத்துறை!

குஜராத் மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் வினியாட்  என்ற கிராமத்தின் ஒரு மரத்தில் நான்கு குரங்குகள் இருந்தன. அங்கு பெய்து வரும் கனமழை

குஜராத் மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் வினியாட்  என்ற கிராமத்தின் ஒரு மரத்தில் நான்கு குரங்குகள் இருந்தன. அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக அந்த நான்கு குரங்குகள் இருந்த மரத்தை சுற்றி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் அந்த குரங்குகள் மரத்தில் இருந்து வெளியே வர முடியாமல் நான்கு  நாள்களாக தவித்து வந்தது.இந்த செய்தியை அறிந்து அங்கு வந்த வனத்துறையினர்  அந்த குரங்குகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் வனத்துறையினர் இரண்டு மரங்களுக்கு இடையில் கயிற்றை கட்டி விட்டனர். பின்னர் அந்த நான்கு குரங்குகள் கயிற்றை பிடித்து கொண்டு ஒவ்வொரு  குரங்குகளாக மரத்தை விட்டு வெளியேறினார்.

unknown node

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில் , அந்த நான்கு குரங்குகளில் மூன்று குரங்குகள் பெண் குரங்குகள்.மரத்தை சுற்றி தண்ணீர் இருந்ததால் நான்கு நாள்களாக உணவு இல்லாமால் தவித்து வந்தது என கூறினார்கள்.