Sonia Gandhi : தீவிர காய்ச்சல்... சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி.!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடுமையான காய்ச்சல் காரணமாக தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் தற்போது டெல்லியில் உள்ள சர் கங்காராம்

Sonia Gandhi , Former Congress Leader

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடுமையான காய்ச்சல் காரணமாக தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் தற்போது டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சோனியா காந்திக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது உடல் நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்ப உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.