கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி மகன் நிகில் குமாரசாமிக்கும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் வீடு வசதி துறை அமைச்சர் கிருஷ்ணப்பாவின் பேத்தி ரேவதிக்கும் ஊரடங்கிற்கு முன்னரே திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்று திருமணம் கோலாகலமாக சுற்றத்தார் மட்டும் சூழ பண்ணை வீட்டில் நடைபெற்றுள்ளது.
பெங்களூருக்கு வெளியில் ராமநகரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் சுற்றத்தார் மட்டும் சூழ இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க இருவீட்டார் உருவாவினர்களும் 40 கார்களில் வந்துள்ளனர். இந்த 40 காரின் விவரங்கள் மட்டும் ராமநகர் காவல்துறையினருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களை தவிர வேறு எந்த வாகனமும் அனுமதிக்கப்படவில்லை.
ஊரடங்கு அமலில் இருக்கும் போது மக்கள் அதிகமாக கூடும் எந்தஒரு விழாக்களுக்கும் அரசு அனுமதி அளிப்பதில்லை. அப்படி இருக்கையில், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் திருமணம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது குறித்து முன்னாள் முதல்வர் குமாரசாமி தரப்பு, இந்த திருமணம் நடப்பதற்கு ஏற்கனவே அரசிடம் உரிய அனுமதி வாங்கிவிட்டதாக தெரிவித்தனர்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…