முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் இந்தியா முழுவதும் கொரானா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இந்நிலையில் இந்தியாவில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகள் என பலர் இந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். தற்பொழுது முன்னாள் பிரதமர் தேவகவுடா அவர்களின் மூத்த மகனும் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி அவர்களின் அண்ணனும் ஆகிய ஒலநரசிபுர தொகுதியின் எம்எல்ஏ எச்.டி.ரேவண்ணா அவர்களுக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சளி,காய்ச்சல் உடல்நலக் குறைவு என மருத்துவமனைக்கு சென்று கொரானா பரிசோதனை மேற்கொண்ட அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இவர் பெங்களூர் விமான நிலைய ரோட்டில் உள்ள மணிப்பால் எனும் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.