திருப்பதியில் மீண்டும் இலவச தரிசனத்திற்கு அனுமதி.!

Announcement that free Swami Darshan tickets will be resumed from midnight today at Tirupati Ezhumalayan Temple.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச சுவாமி தரிசன டிக்கெட்டுகள் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் வழங்கப்படும் என அறிவிப்பு.

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச சுவாமி தரிசன டிக்கெட்டுகள் இன்று நள்ளிரவு 12 மணி முதல் மீண்டும் வழங்கப்படும் என்று கோவில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இன்று டிக்கெட் பெறுபவர்கள் வரும் 4-ஆம் தேதி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தகவல் கூறப்படுகிறது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, திருமலையில் பக்தர்களை அனுமதிப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இலவச தரிசன டிக்கெட் மூலம், நாள்தோறும் 10,000 உள்ளூர் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் மூலம், 20 ,000பேர் அனுமதிக்கப்படுகின்றனர்.