இன்னும் 5 ஆண்டுகள் அவகாசம் கொடுங்கள்., நாங்கள் உருவாக்குகிறோம் – அமித்ஷா

Home Minister Amit Shah has said that give the BJP another 5 years to make Assam a flood-free and non-violent state.

பாஜகவுக்கு இன்னும் 5 ஆண்டுகள் அவகாசம் கொடுங்கள், அசாமை வெள்ளம் இல்லாததாக மாநிலமாக ஆக்குவோம் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்தல் நடைபெற்ற முதல் தேர்தல் பேரணியில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சி அசாமில் பிரித்தாளும் கொள்கை மூலம் ஆட்சி செய்தது. 20 வருடத்தில் 10 ஆயிரம் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். குண்டுகளால் அசாம் இளைஞர்களை காங்கிரஸ் கொன்றது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் அசாமில் ஏற்பட்ட வளர்ச்சி காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 70 ஆண்டுகளில் ஏற்படவில்லை. அசாம் மாநிலத்தில் பல்வேறு இயக்கங்களை தூண்டிவிட்டது. பாஜகவுக்கு இன்னும் ஐந்தாண்டுகள் வழங்கினால் குண்டுகள் அல்லாத, போராட்டம் அல்லாத, வெள்ளப்பெருக்கு அல்லாத நிலையை அசாமில் உருவாக்குவோம் என்று மக்களை வலியுறுத்தினார்.

மேலும் அசாம் வளர்ச்சியின் போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இங்கு மருத்துவமனைகள், கல்லூரிகள் கட்டப்பட்டு வருகின்றன. அசாமில் ஊடுருவல்களை காங்கிரஸ் அரசால் தடுக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.