குட் நியூஸ் : இந்தியாவில் படிப்படியாக குறையும் கொரோனா பாதிப்பு...!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,222 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 290 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,222 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 290 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,30,58,843 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 31,222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 7,726 குறைவு. கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,30,58,843 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 290 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,41,042 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 42,942பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,22,24,937ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,92,864 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை69,90,62,776பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 1,13,53,571 பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.