குட்நியூஸ்..209 நாட்களுக்கு பிறகு 18,346 ஆக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..!

Good news..Daily corona exposure to 18,346 after 209 days ..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,346 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 263 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,38,53,048 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 18,346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 2,400 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,38,53,048 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 263 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,49,260 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 29,639 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,31,50,886 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,52,902 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 91,54,65,826 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 72,51,419 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.