50-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தா அரசு எஞ்சினியர் கைது!

Government engineer Rambavan has been arrested on charges of child sexual abuse and sale of child pornographic photos and videos.

அரசு எஞ்சினியர் ரம்பவன், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்திரப்பிரதேசத்தில் அரசு இன்ஜினியராக பணியாற்றி வருபவர் ரம்பவன். இவர் கடந்த மாதம் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

இதில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை 5 முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள் பண்டா, சித்ரகூட் மற்றும் ஹமீர்பூர் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இதனையடுத்து ரம்பவனின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகளில் 8 மொபைல் போன்கள், ரூ.8 லட்சம் ரொக்கம், பொம்மைகள், ஒரு மடிக்கணினி மற்றும் பிற டிஜிட்டல் சான்றுகள் கிடைத்துள்ளன.

மேலும், அங்கு ஏராளமான சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மின்னஞ்சல்களை ஆராய்ந்ததில் அவர் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினருடன் தொடர்பு கொண்டிருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அவர் மனைவி துர்காவை சிபிஐ கைது செய்துள்ளது. அவர்களுக்கு உதவி செய்ததாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், துர்காவதி ஜனவரி 4-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.