தண்ணீருக்குள் ரூபிக் க்யூப்பை இணைத்து கின்னஸ் சாதனைப் படைத்த இளைஞர்

This news gives information about Guinness record youngster who joined the Rubik Cup in the water

மும்பையைச் சேர்ந்த சின்மய் பிரபு என்ற இளைஞர் ஒருவர் தண்ணீருக்குள் ரூபிக் க்யூப்பை சரியாக இணைத்து கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார்.கடந்த டிசம்பர் மாதம் 9-ம் தேதி நீச்சல் குளம் ஒன்றில் தண்ணீரில் முழ்கிய  முக்கோண வடிவ ரூபிக் க்யூப்பை சரியாக இணைத்து சாதனை படைத்தது உள்ளார்.

இதனால் சின்மய் பிரபுவிற்கு கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் 1. 48 வினாடிகளில் இந்த சாதனையை செய்து உள்ளார் . கடந்த 2017-ம் ஆண்டு தனது கால்களை பயன்படுத்தி ரூபிக் க்யூப்பை இணைத்து லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.