குஜராத் தேர்தல்: 3 மணி நிலவரப்படி 48.48% வாக்குகள் பதிவு!

குஜராத்தில் முதற்கட்ட தேர்தலில் 8 மாவட்டங்களில் 50%-க்கும் மேல் வாக்குகள் பதிவு என தகவல்.

குஜராத்தில் முதற்கட்ட தேர்தலில் 8 மாவட்டங்களில் 50%-க்கும் மேல் வாக்குகள் பதிவு என தகவல்.

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குஜராத் சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில், இன்று 89 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

முதற்கட்ட தேர்தலில் 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பாஜக , காங்கிரஸ்,  ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவுகிறது. இன்று மாலை 5 மணி வரை நடைபெற உள்ள வாக்குபதிவில் சுமார் 2.39 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.  இன்று வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், தங்களது வாக்குகளை பொதுமக்கள் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், குஜராத் சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 48.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில், முதற்கட்ட தேர்தலில் குஜராத்தில் 8 மாவட்டங்களில் 50%-க்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளன என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், மறுபக்கம் 50 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது என காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. தேர்தல் நடைபெறும் ராஜ்கோட், ஜாம்நகர் உள்ளிட்ட தொகுதிகளில் 50  வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது என கூறப்படுகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது என மாற்றப்படுவதாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.