ஹரியானா வன்முறை.. 2 மசூதிகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு.!

ஹரியானா மாநிலம் நுஹ் மாவட்டத்தில் கடந்த திங்கள் கிழமை இந்து அமைப்பினர் நடத்திய ஊர்வலத்தில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு ஊர்காவல் படை காவலர்கள்

Petrol bombs hurled at 2 mosques - Haryana

ஹரியானா மாநிலம் நுஹ் மாவட்டத்தில் கடந்த திங்கள் கிழமை இந்து அமைப்பினர் நடத்திய ஊர்வலத்தில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு ஊர்காவல் படை காவலர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக ஹரியானா மாநிலம் மட்டுமின்றி டெல்லியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணியளவில், நுஹ் மாவட்டத்தில் உள்ள டாரு பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளில் மர்மநபர்கள் திடீரென பெட்ரோல் குண்டுகளை வீசினார். மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் செய்த இச்செயலில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவிலை.

ஒரு மசூதி விஜய் சௌக் அருகிலும் மற்றொரு மசூதி காவல் நிலையத்திற்கு அருகிலும் அமைந்துள்ளது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து தீயை அணைத்தனர். காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.