வருமான வரம்பை நிர்ணயிக்க அறிவியல் பூர்வமான ஆய்வு ஏதாவது செய்யப்பட்டதா? – உச்ச நீதிமன்றம்

How did you set the reservation income limit for the upper caste poor? That is the question of the Supreme Court to the Central Government.

உயர் சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு வருமான வரம்பை எப்படி நிர்ணயித்தீர்கள்? என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான வருமான வரம்பை எப்படி நிர்ணயித்தீர்கள் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. நகரம், கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு எப்படி ஒரே மாதிரியான வருமான வரம்பை நிர்ணயிக்க முடியும்? என்றும் வருமான வரம்பை நிர்ணயிக்க அறிவியல் பூர்வமான ஆய்வு ஏதாவது செய்யப்பட்டதா? எனவும் கேள்வி எழுப்பியது.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான சான்றிதழை வட்டாட்சியரிடம் பெற வேண்டும் என்கீறீர்கள். வட்டாச்சியர் எந்த அடிப்படையில் வருமான சான்றிதழ் வழங்குகிறார் எனவும் உச்சநீதிமன்றம் சரமாரியாக கேட்டுள்ளது. பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக விசாரணையின் போது இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும் தனி மனித வருமானம் மாறுபடும் போது, EWS பிரிவுக்கு ஒட்டுமொத்தமாக வருமான வரம்பை எப்படி நிர்ணயித்தீர்கள்? என்றும் 10% இடஒதுக்கீட்டில் வரம்பு நிர்ணயம் செய்தது எப்படி? எனவும் கேட்டு, பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.