கேரளாவில் தொடரும் கனமழை : ரெட் அலர்ட் எச்சரிக்கை ....!

A red alert has been issued for Ernakulam, Idukki and Thrissur due to heavy rains in Kerala.

கேரளாவில் தொடரும் கனமழை காரணமாக எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் ஆகிய பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் கேரள மாநிலத்திலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இன்று காலையும் கேரள மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் உள்ள அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் சாலைகளிலும், வீடுகளுக்குள்ளும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே கேரள மாநிலத்தில் எர்ணாக்குளம், இடுக்கி மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.