கேரளாவில் கனமழை : காங்கிரஸ் தொண்டர்கள் சகோதர, சகோதரிகளுக்கு உதவுங்கள் – ராகுல் காந்தி!

Rahul Gandhi has asked Congress volunteers to help brothers and sisters affected by heavy rains in Kerala.

கேரளாவில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சகோதர, சகோதரிகளுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உதவுங்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலத்திலுள்ள இடுக்கி, எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சில அணைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், காக்கி மற்றும் இடுக்கி ஆகிய அணைகளும்  திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி அவர்கள், கேரளாவில் உள்ள நமது சகோதர சகோதரிகள் கனமழையால் தவித்து வருகின்றனர். எனவே காங்கிரஸ் தொண்டர்கள் எல்லா வகையிலும் அவர்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். கேரளாவில் உள்ள சகோதர, சகோதரிகளே கவனமாக இருங்கள். மேலும் அனைத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் பின்பற்றுங்கள் எனத் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,

unknown node