கேரளாவில் கனமழை : குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழப்பு!

Three people, including children, have been killed in heavy rains in Kerala.

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் 2 குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருச்சூர், எர்ணாக்குளம், இடுக்கி, கண்ணூர், கோழிக்கோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று கேரளாவில் பெய்த தொடர் கனமழை காரணமாக பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த வெள்ள பாதிப்பால் பல இடங்களில் பொருட்சேதம் ஏற்பட்டிருப்பதுடன், உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது. மேலும், நேற்று பெய்த கனமழை காரணமாக 2 குழந்தைகள் உட்பட 3 பேர் கேரளாவில் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.