காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதில் அவரின் பங்கு எப்போதும் நினைவில் இருக்கும் – பிரதமர்!

In his condolence note, Ahmed Patel said that his role in strengthening the Congress party will always be remembered.

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதில் அவரின் பங்கு எப்போதும் நினைவில் இருக்கும் என அஹ்மத் பட்டேல் அவர்கள் குறைத்து பிரதமர் தனது இரங்கல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சோனியா காந்தியின் நெருங்கிய உதவியாளருமான அஹ்மத் பட்டேல் அவர்கள் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், அவருக்கு உறுப்புகள் செயலிழந்து மிகவும் மோசமான உடல் நிலையில் இருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அஹ்மத் அவர்கள் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அஹ்மத் பட்டேல் ஜி அவர்களின் மறைவு வருத்தமளிப்பதாகவும், கூர்மையான மனமுடைய அவர் சமூகத்திற்கு சேவை செய்தவர். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதில் அவரது பங்கு எப்பொழுதும் நினைவில் இருக்கும். அவரது மகன் பைசலிடம் பேசி இரங்கல் தெரிவித்தேன், அஹ்மத் பாயின் ஆத்துமா சாந்தியடையட்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,

unknown node