ஜனவரி 8 முதல் 16 வரை கல்வி நிலையங்களுக்கு விடுமுறை – முதல்வர் அறிவிப்பு!

The Telangana Chief Minister has announced that educational institutions will be closed from January 8 to 16.

ஜனவரி 8 முதல் 16 வரை கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெலங்கானா முதல்வர் அறிவிப்பு.

தெலுங்கானா மாநிலத்தில் அனைத்து கல்வி நிலையங்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவித்துள்ளார்.

ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை மையப்படுத்தி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனாவை சமாளிக்க அனைத்து விதமான ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும், தெலுங்கானா மாநிலத்தில் தற்போதுள்ள 99% அரசு மருத்துவமனைகள் தங்கள் படுக்கைகளை ஆக்ஸிஜன் படுக்கைகளாக மாற்றியுள்ளன என்றும் தற்போது லாக்-டவுன் விதிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறியுள்ளார்.