கனமழையால் இடிந்து விழுந்த வீட்டு சுவர் – ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்!

In Maharashtra, a house wall collapsed due to heavy rain. One person was killed and five others were injured in the incident.

மகாராஷ்டிராவில் கனமழை காரணமாக வீட்டு சுவர் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 5 பேர் காயமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மும்பை கிழக்கு பாண்ரா பகுதியில் நேற்று இரவு கன மழை கொட்டித் தீர்த்தது. அப்பொழுது அந்த பகுதியில் உள்ள ஹார்வாடி சாலை பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் ஒரு வீட்டின் சுவர் கனமழை காரணமாக இடிந்து விழுந்து மற்றொரு வீட்டின் மீது விழுந்துள்ளது. இந்த விபத்தில் இடிந்து விழுந்த வீட்டில் இருந்தவர்கள் உட்பட அண்டை வீடுகளில் இருந்த 15 பேர் சிக்கிக் கொண்டுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். அப்பொழுது இடிபாட்டில் சிக்கி இருந்த 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 5 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கட்டிட விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் தற்பொழுது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.