கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எவ்வளவு ...?

In India, 30,948 people have been newly infected with corona in the last 24 hours. The death toll has been reported as 403 and the total number of casualties so far is 3,24,24,234.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,948 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 403  ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,24,24,234 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 30,948 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 3,509 குறைவு. கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,24,24,234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 403 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,34,367 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 38,487 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,16,36,469 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,53,398 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 58,14,89,377 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 52,23,612 பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.